விண்வெளித்துறை

இந்தியாவில் பல்வேறு விண்வெளி செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து 27 விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன

Posted On: 22 JUL 2021 4:26PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்தியாவில் பல்வேறு விண்வெளி செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து 27 விண்ணப்பங்கள் அரசுக்கு இது வரை வந்துள்ளன.

ஏவு வாகனங்களை கட்டமைத்தல், செயற்கைக்கோள்களை கட்டமைத்து சொந்தமாக்கி, செயல்படுத்துதல், செயற்கைக்கோள் சார்ந்த சேவைகளை வழங்குதல், கள பிரிவுகளை நிறுவுதல், ஆராய்ச்சி கூட்டு மற்றும் குறிப்பிட்ட சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கான முன்மொழிதல்கள் அரசுக்கு வரப்பெற்றுள்ளன.

டிஜிட்டல் கல்விக்காக விண்வெளி தொழில்நுட்ப செயல்பாடுகள் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. 19 நாடுகள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கல்வி நிகழ்ச்சிகளை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 51 கல்வி அலைவரிசைகளை விண்வெளி பயன்பாடுகளுக்கான தேசிய நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இதைத் தவிர, இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள், பணியில் உள்ளோர், கல்வியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் முனைப்புடன் பயிற்சி அளித்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் இத்திட்டங்கள் மூலம் 2.42 லட்சம் பேர் பயனடைந்தனர். அரசு சாரா அமைப்புகள் பெரிய அளவில் பங்குபெறும் வகையில் விண்வெளி துறை திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737737

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737739

 

----



(Release ID: 1737861) Visitor Counter : 214


Read this release in: English , Urdu , Bengali , Punjabi