ஜவுளித்துறை அமைச்சகம்

நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி : மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 22 JUL 2021 3:15PM by PIB Chennai

நாட்டில் 56,934 நெசவாளர்களுக்கு திறன்  மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜோர்தோஷ்  இன்று தெரிவித்தார்

அவர், மாநிலங்களவையில், இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கைத்தறி நெசவாளர்களுக்கு, ஜவளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  28 நெசவாளர்  சேவை மையங்கள்  மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  2015-16ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை 56,934 நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவர்களில்  5,498 நெசவாளர்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

நாடு முழுவதும் கைத்தறியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனுக்காக கீழ்கண்ட திட்டங்கள் ஜவுளித்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றன:-

தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டம் (NHDP)

விரிவான கைத்தறி தொகுப்பு வளர்ச்சி திட்டம் (CHCDS)

கைத்தறி நெசவாளர்களின் விரிவான நலத் திட்டம்

நூல் விநியோக திட்டம் (YSS)

மேற்கண்ட திட்டங்களின் கீழ்கச்சாப் பொருட்கள், தறிகள் மற்றும் துணைப் பொருட்கள், புதுமையான வடிவமைப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, திறன் மேம்பாடு, கைத்தறி பொருட்களின் விற்பனை போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

அரசின் மின்னணு-சந்தை இணையதளத்தில் 1.5 லட்சம் நெசவாளர்கள்:

கொவிட் தொற்று  காரணமாக, நெசவாளர்கள் சந்தித்த சவால்களை சமாளிக்க, கீழ்கண்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது

கொவிட் காரணமாக வழக்கமான விற்பனை முறைக்கு சாத்தியம் இல்லாததால், காணொலி காட்சி மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்காட்சிகளை கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (எச்இபிசிநடத்தியது. 2020-21ம் ஆண்டில்  12 கைத்தறி கண்காட்சிகளை எச்இபிசி நடத்தியது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களை ஈர்த்தது. அதோடு 53 உள்நாட்டு கண்காட்சிகளும் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது.

அரசு மின்னணு சந்தையில் நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், இதுவரை 1.5 லட்சம் நெசவாளர்கள் இணைந்துள்ளனர்.

உற்பத்தியை அதிகரிக்க, பல மாநிலங்களில் 124 கைத்தறி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

ஜவுளித்துறை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் திட்டங்கள்:

ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு திட்டம்(சாமர்த்): ஜவுளித்துறையில் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க, ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதுஇது ஜவுளித்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு உதவியது. இது அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்துக்கு உதவியது. 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இத்திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, 24 புதிய ஜவுளி பூங்காக்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737709

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737711

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737712

 

----



(Release ID: 1737850) Visitor Counter : 243