மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கல்வி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில்

Posted On: 22 JUL 2021 2:47PM by PIB Chennai

கல்வி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 (RTE), 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வியைசம்பந்தப்பட்ட  அரசுகள் வழங்குவதை உறுதி செய்கிறதுகொவிட் தொற்று காலத்தில், குழந்தைகளுக்கு தொலை தூரத்தில் இருந்து கல்வி கிடைப்பதற்கு, மத்திய கல்வி அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்தது.

டிஜிட்டல்/ஆன்லைன்டி.வி மற்றும் ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க பிரதமரின் -வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இதில் உள்ள அனைத்து விதமான டிஜிட்டல் முறைகளில்திக்‌ஷா(ஆன்லைன்), ஸ்வயம் (ஆன்லைன்), ஸ்வயம் பிரபா (டி.வி), தூர்தர்ஷனின் இதர சேனல்கள், அகில இந்திய ரேடியோ நெட்வொர்க்குகள் மூலம் கல்வியை பெறலாம்பலவிதமான முறைகள் மூலம் கல்வியை தொடர்ந்து வழங்குவதற்கான வசதிகளை செய்ய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பிரக்யதா வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இணையள இணைப்பு இல்லாதவர்களுக்கு டி.வி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றலுக்கு தீர்வு காண மாற்று கல்வி அட்டவணை உருவாக்கப்பட்டது.

அதோடு, சமுதாய ரேடியோ, நோட்டு, புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்குதல், மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் செல்லுதல், சமுதாய வகுப்பறைகள், இலவச போன் எண்கள், எஸ்எம்எஸ் வேண்டுகோள் அடிப்படையிலான ஆடியோ பாடங்கள் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.   மாணவர்களுக்கு கல்வி வழங்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்த நடவடிக்கைகள் - இந்திய டிஜிட்டல் கல்வி அறிக்கை, ஜூன் 2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/India_Report_Digital_Education_0.pdf.

தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை:

சிக்‌ஷா வாணி மூலம் ரேடியோ, சமுதாய ரேடியா, சிபிஎஸ்இ பாடங்களின் ஆடியோ பதிவிறக்கம்  போன்றவை விரிவாக பயன்படுத்தப்பட்டது.

பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்களுக்காக NIOS இணையளம் / யூ டியூப்-ல் சிறப்பு -பாடங்கள் மற்றும் சைகை மொழி பாடங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்க, யுஜிசி தேவையான ஒழுங்குமுறைகளை அறிவித்தது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் முழு அளவில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தின.

மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்ய ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய டிஜிட்டல் நூலகம் (NDL),  மெய்நிகர் ஆய்வுக் கூடம், -யந்த்ரா, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி, கல்விக்கான திறந்தவெளி மென்பொருள் போன்ற பலவிதமான டிஜிட்டல் நடவடிக்கைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737692

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737693

 

----(Release ID: 1737782) Visitor Counter : 121