கலாசாரத்துறை அமைச்சகம்

புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தைப் பார்வையிட்டனர் மத்திய அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி

Posted On: 21 JUL 2021 6:16PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, இணை அமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தை இன்று பார்வையிட்டனர். கலாச்சார செயலாளர் திரு ராகவேந்திர சிங், கலைக்கூடத்தின் தலைமை இயக்குநர் திரு அத்வைதா கதாநாயக், இயக்குநர் திருமிகு டெம்சுனாரோ ஜமீர் மற்றும் இதர அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.

அமிர்தா ஷெர்கில், ரவீந்திரநாத் தாகூர், ராஜா ரவி வர்மா, நிக்கோலஸ் ரோரிச், ஜாமினி ராய், ராம்கிங்கர் பெய்ஜ் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர் மாளிகையை அமைச்சர்கள் பார்வையிட்டனர். தற்காலிக கண்காட்சி அரங்கம் மற்றும் கண்காட்சி மாளிகையில் (புதிய பிரிவு) நிறுவப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்களை அவர்கள் பார்வையிட்டனர். கண்களைக் கவரும் வகையில் கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்த் லால் போஸின் ஓவியங்களை அவர்கள் ஆர்வத்துடன்  கண்டு ரசித்தனர்.

மெய்நிகர் அருங்காட்சியகம், ஒலி ஒளியுடன் கூடிய செயலி உள்ளிட்ட கலைக்கூடத்தின் பல்வேறு முன்முயற்சிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

 

இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு ரெட்டி, விடுதலையின் அம்ருத் மகோற்சவத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க தேசிய நவீன கலைக்கூடம் புதுப்பிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு புத்தம் புதிய பொலிவுடன் தேசிய நவீன கலைக்கூடம் நாட்டிற்கு மீண்டும் அர்ப்பணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737545

----


(Release ID: 1737562) Visitor Counter : 257