சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2021 9:25AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 41.54 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.
நாட்டில் இதுவரை மொத்தம் 3,03,90,687 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் வீதம் தற்போது 97.36 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,977 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 42,015 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 4,07,170 பேர் கொவிட் சிகிச்சை பெறுகின்றனர். கொவிட் சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 1.30 சதவீதம் பேர்.
வாராந்திர பாதிப்பு வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது, தற்போது 2.09 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம் 2.27 சதவீதம், தொடர்ந்து 30 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
கொவிட் பரிசோதனை திறன் கணிசமாக அதிகரித்துள்ளது - மொத்தம் 44.91 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டன.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1737490)
வருகையாளர் எண்ணிக்கை : 259