இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் தயார் ஆவதற்காக சிறப்பு உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் செய்தது: மத்திய விளையாட்டு அமைச்சர்

Posted On: 19 JUL 2021 4:50PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 18 பிரிவுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் தயார் ஆவதற்காக சிறப்பு உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தொடர்ந்து செய்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. டாப்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கப்பட்டது.

நாட்டின் அடிமட்ட அளவிலும் விளையாட்டு சூழலியலை வலுப்படுத்த வேண்டும் எனும் அரசின் லட்சியத்தின் ஒரு பகுதியாக, குறைந்த செலவில் சிறப்பான பயிற்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், முன்னாள் வெற்றி வீரர்கள் அடிமட்ட அளவில் உள்ள வளரும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். முன்னாள் வீரர்களுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும். கேலோ இந்தியா மையத்தின் நிதியில் இருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 267 மாவட்டங்களில் கேலோ இந்தியா மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொடக்க கட்டத்தில் ரூ. 5 லட்சமும், அடுத்த நான்கு வருடங்களுக்கு வருடத்திற்கு ரூ. 5 லட்சமும் இந்த மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736809

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736811

*****************

 


(Release ID: 1736941) Visitor Counter : 224