திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் வளர்த்தல் வாரியம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அமைச்சரின் பதில்

Posted On: 19 JUL 2021 4:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகத்தின் முதன்மை திட்டமான பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 2.0-வின் (2016-2020) கீழ், ஒரு கோடி நபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 1.09 கோடி நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

2021 ஜனவரி 15 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 3.0-வின் (2020-2022) கீழ், 8 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.2 லட்சம் பேருக்கு இது வரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி/சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயிற்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாவட்ட அளவிலான திறன் வளர்த்தலை திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனாவின் கீழ், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக அசாம், பிகார், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 70,823 கோடி நபர்களுக்கு இது வரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736797

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736798

*****************



(Release ID: 1736926) Visitor Counter : 236