தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
52-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய பனோரமா 2021-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, 52-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா அறிவித்துள்ளது. இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் முக்கிய அம்சமான இந்திய பனோரமாவில் இந்தியாவின் சிறந்த சமகால திரைப்படங்கள் திரையிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. 52-வது பதிப்பு கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 12. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டதற்கான அச்சுப்பிரதி மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். 2021 இந்திய பனோரமாவில் திரையிடுவதற்கான திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கு ஒரு சில வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழைப் பெற்ற தேதி அல்லது சமர்ப்பிக்கப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பு நிறைவடைந்த தேதி, ஆகஸ்ட் 1, 2020 முதல் ஜூலை 31, 2021க்குள் இருக்க வேண்டும். எனினும் இந்த சான்றிதழ் அல்லது வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் தயாரிக்கப்படாத திரைப்படங்களும் அனுப்பப்படலாம். அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் வசன வரிகள் இடம்பெறவேண்டும்.
இந்திய திரைப்படங்களின் வாயிலாக அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கடந்த 1978-ஆம் ஆண்டு இந்திய பனோரமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல், ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த இந்திய திரைப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்படத் திருவிழாக்கள், இருதரப்பு கலாச்சார பரிமாற்றத் திட்டங்களின் கீழ் நடைபெறும் இந்திய திரைப்பட வாரங்கள், கலாச்சார பரிமாற்ற நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்பு இந்திய திரைப்படத் திருவிழாக்கள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் சிறப்பு இந்திய பனோரமா திருவிழாக்களில் திரையிடுவதன் வாயிலாக இந்தியாவின் தலைசிறந்த திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை தேர்வு செய்து அவற்றை ஊக்கப்படுத்துவது தான் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின், திரைப்படத் திருவிழா இயக்குநரகம் நடத்தும் இந்திய பனோரமாவின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736521
-----
(Release ID: 1736562)
Visitor Counter : 359
Read this release in:
Malayalam
,
Punjabi
,
Marathi
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada