சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUL 2021 9:35AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 40.49 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இதுவரை 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர்.  குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,22,660 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.36 சதவீதமாகும்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.08 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 27 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.13 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.39 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736488

----


(வெளியீட்டு அடையாள எண்: 1736558) வருகையாளர் எண்ணிக்கை : 272
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam