சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 நோயாளிகள் அனைவருக்கும் டி.பி பரிசோதனையும், டி.பி நோயாளிகள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை

Posted On: 17 JUL 2021 4:13PM by PIB Chennai

சமீபத்தில் கொவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் காசநோய்(டிபி) அதிகரிப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த சோதனைக்கு ஒவ்வொரு நாளும் பலர் வருவது மருத்துவர்களை கவலையடைச் செய்துள்ளது.

கொவிட்-19 நோயாளிகள் அனைவருக்கும் டி.பி பரிசோதனை செய்யும்படியும், டி.பி நோயாளிகள் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை செய்யும்படியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த கண்காணிப்பு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கேட்டுக் கொள்ளப்பட்டன.

இதுதவிர, TB-COVID மற்றும் TB-ILI/SARI என்ற இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ளும்படி அறிவறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதுஇதை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தியுள்ளன.

கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளால், கடந்த 2020ம் ஆண்டில் டி.பி நோய் பாதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிறப்பு முயற்சிகளை அனைத்து மாநிலங்களும் எடுக்கின்றன.

மேலும், கொவிட்-19 பாதிப்பு காரணமாக, தற்போது காசநோய் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

டி.பி மற்றும் கொரோனா ஆகிய இரண்டுமே, தொற்று நோய் மற்றும் நுரையீரல்களை தாக்ககூடியது  என்பதாலும், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் என இவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இந்த இரு நோய்களும் மேலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன

மேலும், டி.பி கிருமி மனித உடலில் செயலற்ற நிலையில் இருந்து, எதிர்ப்பு சக்தி குறையும்போது பல்கி பெருகும் ஆற்றல் உடையது. கொவிட் பாதிப்புக்கு பிந்தைய சூழலிலும், இதே நிலைதான் உள்ளது. வைரஸ் அல்லது ஸ்டிராய்டு சிகிச்சையின் காரணமாக தனிநபருக்கு எதிர்ப்பு சக்தி குறையலாம்.

கருப்பு பூஞ்சை போன்று, காசநோயும், சந்தர்ப்ப பாதிப்பு என்பதால், கொவிட் பாதிப்பு ஒரு தனிநபரை தீவிர டி.பி பாதிப்புக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736417

 

-----


(Release ID: 1736434) Visitor Counter : 284