பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

துறைரீதியான செலவில் 65% சேமித்ததற்காக பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறைக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

Posted On: 16 JUL 2021 5:16PM by PIB Chennai

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது, 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் துறைரீதியான செலவில் 65 சதவீதத்தை சேமித்ததற்காக பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.

நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்த 20 சதவீத தேவையற்ற செலவு குறைப்புடன் ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமாகும்.

நான்கு செலவு பிரிவுகளான வெளிநாட்டு பயணத்தில் 100 சதவீத சேமிப்பும், உள்நாட்டு பயணத்தில் 60.20 சதவீத சேமிப்பும், நிர்வாக செலவினங்களில் 85.84 சதவீத சேமிப்பும், வெளியீடுகளில் 79.16 சதவீத சேமிப்பும் சாத்தியமாகியுள்ளது.

 

திங்களன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் விரிவான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ஜிதேந்திர சிங், செலவுகளை குறைப்பதில் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் பங்கை பாராட்டினார்.

பயணம், உணவு மற்றும் கூட்டங்களுக்கான செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த சேமிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும் என்று அவர் கூறினார்.

பயோமெட்ரிக் வருகைப் பதிவில் விலக்கு, ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு, முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த உதவியதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736189

*****************



(Release ID: 1736297) Visitor Counter : 222