பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி அளிப்பதற்காக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய மகளிர் ஆணையம் கையெழுத்து

Posted On: 16 JUL 2021 5:08PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி அளிப்பதற்காக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தேசிய மகளிர் ஆணையம் கையெழுத்திட்டது. 

தேசிய மகளிர் ஆணைய தலைவர் திருமிகு ரேகா சர்மா, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலக தலைமை இயக்குநர் திரு விஎஸ்கே கவுமுதி, கூடுதல் தலைமை இயக்குநர் திரு நீரஜ் சின்ஹா மற்றும் துணைத் தலைவர் (பயிற்சி) வந்தன் சக்சேனா ஆகியோர் புதுதில்லி மகிபால்பூரில் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலக தலைமையகத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் முன்னிலையில் மேற்கண்ட இரு அமைப்புகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெண்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து காவல் துறையினரிடையே விழிப்புணர்ச்சி உருவாக்குவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் போது காவல் அதிகாரிகளிடையே மனதளவில் மற்றும் செயல்பாட்டு அளவில் மாற்றத்தை கொண்டு வருவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மொத்தம் 18-24 மணி நேரத்திற்கான பயிற்சியுடன், 3 முதல் 5 நாட்களுக்கு இந்த பயிற்சி நடத்தப்படும். பாலின பிரச்சினைகள், பெண்கள் தொடர்பான சட்டங்கள், செயல்படுத்தும் முகமைகளின் பங்கு, சிறந்த நடைமுறைகள் ஆகியவை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736188

*****************



(Release ID: 1736296) Visitor Counter : 332