மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உமங் செயலியில் வரைபட சேவை: மேப் மை இந்தியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Posted On:
16 JUL 2021 4:38PM by PIB Chennai
அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக வழங்கி பொதுமக்களின் வாழ்வை எளிதாக்கும் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முயற்சிகளை மேம்படுத்தவும், தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளைக் கருத்தில் கொண்டும் மேப் மை இந்தியா உடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உமங் செயலியில் வரைபடங்களை அணுகும் சேவையை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
உமங் மற்றும் மேப்மைஇந்தியா இடையிலான இந்த ஒருங்கிணைப்பின் மூலம் மண்டிகள், ரத்த வங்கிகள் போன்று தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் பல்வேறு அரசு சார்ந்த வசதிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள தளத்தில் இந்தியாவின் தெருக்களும், கிராம அளவிலான வரைபடங்களும் விரிவான தகவல்களுடன் இடம்பெற்றுள்ளன. வாகன பயண தூரம், வழிகாட்டுதல்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பாதுகாப்பு போன்ற தகவல்கள் குரல் வடிவிலும் காணொலி வடிவிலும் வழங்கப்படும்.
• மேரா ரேஷன்- ஒருங்கிணைந்த மேப்மைஇந்தியா வரைபடத்தில் நியாயவிலை கடைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருப்பதால் உமங் பயனாளர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கடைகளை எளிதாக கண்டறிந்துக் கொள்ளலாம்.
• இ-நாம்: தங்கள் அருகிலுள்ள மண்டிகள் பற்றிய தகவல்களை உமங் செயலி மூலம் பயனாளர்கள் பெற்று பயனடையலாம்.
• தாமினி- இந்த சேவையின் மூலம் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு மின்னல் தாக்கிய பகுதிகளை காணொலியுடன் கூடிய தகவல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
97183-97183 என்ற எண்ணிற்கு விடுபட்ட அழைப்பை (மிஸ்டு கால்) செய்து உமங் செயலியை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கீழ்காணும் இணைப்புகளின் வழியாகவும் இந்த சேவையை பதிவிறக்கம் செய்யலாம்:
1. இணையதளம்: https://web.umang.gov.in/web/#/
2. ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c
3. ஐஓஎஸ்: https://apps.apple.com/in/app/umang/id1236448857
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736179
*****************
(Release ID: 1736263)
Visitor Counter : 460