மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் இணைந்து பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை துவக்கிவைத்தனர்

Posted On: 16 JUL 2021 2:43PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் இணைந்து 50,000 ஆசிரியர்களுக்கான பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தைஇன்று துவக்கி வைத்தனர்.

இணை அமைச்சர்கள் திருமதி அண்ணப்பூர்ணா தேவி, திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் டாக்டர் சுபாஸ் சர்கார் மற்றும்

கல்வி அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் நலன் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்துவதாக கூறிய அமைச்சர் திரு பிரதான், நமது மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக மாற்றத்தின் முகவர்களாகவும், புதுமைகளின் தூதுவர்களாகவும் நமது ஆசிரியர்களை ஆக்குவதை நாம் லட்சியமாக கொண்டுள்ளோம் என்றார்.

தொழில்நுட்பம் உலகத்தை மாற்றியமைத்து கொண்டு வருவதாக தெரிவித்த திரு பிரதான், உள்நாட்டு சவால்கள் மட்டுமில்லாமல் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வல்லமையும் நமது மாணவர்களுக்கு உண்டு என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, இந்த புதிய திட்டத்திற்காக கல்வி அமைச்சகத்திற்கு தமது நன்றியை தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள பழங்குடியின குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவர் என்றும் அவர் கூறினார்.

இன்று தொடங்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான இந்த புதுமையான மற்றும் பிரத்தியேகமான திட்டத்தின் மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவர்.

கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், ‘உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கான புதுமை தூதர் பயிற்சி திட்டத்தின்அடிப்படையிலானது ஆகும். ஆன்லைன் முறையின் மூலம் மட்டுமே இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736139

*****************



(Release ID: 1736195) Visitor Counter : 167