ஆயுஷ்

ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- குஜராத் அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 16 JUL 2021 11:03AM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், குஜராத் மாநில அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அம்மாநில துணை முதல்வர் திரு நிதின்பாய் பட்டேல் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொடேச்சா முன்னிலையில் ஜூலை 15 அன்று கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜாம்நகர் ஆயுர்வேத வளாகத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நிதின் பாய், ஆயுர்வேதத்தின் அனைத்துப் பிரிவுகளின் கல்விமுறையை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் வித்தாக அமையும் என்று கூறினார்.

ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அனுப் தாக்கர் மற்றும் குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் திரு ஹெச் பி ஜாலா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

“இந்த ஒப்பந்தத்தால் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறையில் புதிய வாய்ப்புகள் விரைவில் ஏற்படுத்தப்படும்”, என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஆயுர்வேதத் துறையில் புதிய கற்பித்தல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி முறைகளை உருவாக்குவது எளிதாகப்படும் என்றும், ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த வாய்ப்புகளை விரிவுபடுத்தி, ஆய்வு- ஆராய்ச்சி செயல்முறை தீவிரப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, ஆயுர்வேதத் துறையில் புதிய கற்பித்தல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி முறைகளை எளிதாக உருவாக்குவதற்கு இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்றார். ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நடைமுறைகளை மேலும் ஆழப்படுத்தலாம் என்றும், ஆயுர்வேத கல்வி மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களை மறுவடிவமைப்பதில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முன்னோடியாகத் திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736077

*****

(Release ID: 1736077)



(Release ID: 1736135) Visitor Counter : 228