சுற்றுலா அமைச்சகம்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசாத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 15 JUL 2021 7:46PM by PIB Chennai

 “பிரசாத் திட்டம்- பகுதி II-ன் கீழ் வாரணாசி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சுற்றுலா வசதி மையம் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் வாரணாசியில் ஆற்று பயண மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அஸ்ஸி காட்டில் இருந்து ராஜ்காட் வரையிலான படகு பயணம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், அமைச்சர் திரு நீல்கண்ட் திவாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேந்திர நாராயண் சின்ஹா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரசாத் திட்டம்- பகுதி II-ன் கீழ் வாரணாசி மேம்பாட்டு திட்டம்” 2018 பிப்ரவரியில் ரூ 44.69 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பஞ்ச்கோஷி பாத்’, ‘பக்தர்கள் வசதி மையம்’, ‘ராமேஷ்வர்’, ‘சாலை மேம்பாடுமற்றும் வழிகாட்டி பலகைகள்ஆகிய கூறுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

பிரசாத் திட்டத்தின் கீழ் வாரணாசியில் ஆற்று பயண மேம்பாட்டு திட்டம்” 2018 பிப்ரவரியில் ரூ 10.72 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனம்’, ‘படகு இறங்கு துறை’, ‘ஒலி, ஒளி அமைப்புகள்மற்றும் சிசிடிவி கண்காணிப்புஆகிய கூறுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

இந்திய அரசு வழங்கிய நிதியை சிறப்பாக பயன்படுத்தி சர்வதேச தரத்திலான வசதிகளை உருவாக்கியதற்காக மாநில அரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735970

*****************



(Release ID: 1735991) Visitor Counter : 293