நிதி அமைச்சகம்
அனைத்து முன்னணி விமான நிலையங்களிலும், கொவிட்-19 தடுப்பூசிகளை விரைவாக அனுப்ப, கொவிட் நடவடிக்கை திட்டம்(CRP): மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அமல்
Posted On:
15 JUL 2021 6:09PM by PIB Chennai
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டிய தடுப்பூசிகளை திறம்படவும், விரைவாகவும் அனுப்ப வேண்டும் என்பதை உணர்ந்த மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(சிபிஐசி), அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும், கொவிட் நடவடிக்கை திட்டத்தை முன்வைத்துள்ளது.
மேலும், கூரியர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திருத்த ஒழுங்குமுறைகள், 2020-ஐ வெளியிடுவதன் மூலம் கூரியர் மூலம் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி / இறக்குமதிக்கு சிபிஐசி உதவியுள்ளது.
முன்பு, இந்த கூரியர் ஒழுங்குமுறைகளில் பொருட்களின் மதிப்பு மீது சில வரம்புகள் இருந்தன. திருத்தப்பட்ட ஒழுங்குமுறைகளில், மதிப்பு வரம்பு இன்றி கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுகிறது.
தடுப்பூசிகள் வெப்பநிலை கண்காணிப்பு மற்றும் வழித்தடத்தை கண்காணிக்கும் கருவிகளுடன் கூடிய கன்டெய்னர்களில் அனுப்பப்படுவதால், இவற்றை வரியின்றி அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய, தடுப்பூசிகளின் சரக்கு கொண்டு செல்லப்படுவதை சிபிஐசி உன்னிப்பாக கண்காணிக்கும் மற்றும் இது தொடர்பாக எழும் பிரச்னைகளையும் தீர்க்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735927
*****************
(Release ID: 1735965)