தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கொவிட்-19 தொற்றின்போது இஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு நன்கொடையளித்தவர்களுக்கு இஎஸ்ஐசி பாராட்டு

Posted On: 15 JUL 2021 5:41PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று சமயத்தில் இஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு பலவிதமான உபகரணங்கள் மற்றும் பொருட்களை நன்கொடையாக அளித்தவர்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் இன்று பாராட்டு தெரிவித்தார்.  இத்துறையின் இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தேலி, செயலாளர் திரு அபூர்வ சந்திரா, இஎஸ்ஐசி தலைமை இயக்குனர் திரு முக்மீத் எஸ் பாட்டியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அரசு, தனியார் நிறுவனங்கள், சிவில் சொசைட்டி, தொண்டு நிறுவனங்கள், மற்றும் தனியார் நபர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், கொவிட்-19 தொற்று இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட சுகாதார நெருக்கடி சமாளிக்கப்பட்டது.    நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் ரூ.13 கோடி மதிப்பில் பொருட்கள் மற்றும் உபகரணங்களை இஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் கொவிட் தொற்றை எதிர்கொள்ள, கண்டறிதல் பரிசோதனை  மற்றும் சிகிச்சை  என்ற மூன்று முறையை அரசு பின்பற்றியது என்றார்.   பிபிஇ உடைகள், முகக்கவசங்கள் உற்பத்தி துறையிலும் நாடு முன்னேறியது எனவும் நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன என்றும் கூறினார். இந்தாண்டு இறுதிக்குள், 257 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என திரு புபேந்தர் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி  பேசுகையில், அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக அரசு பணியாற்றுகிறது என கூறினார். 13 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயன் அளிக்கும்  இஎஸ்ஐசி-யை அவர் பாராட்டினார்.  தொற்றுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735901

*****************



(Release ID: 1735952) Visitor Counter : 223