அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
துருவ உயிரியல் துறையில் மேம்பாடு தொடர்பாக அமைச்சகங்கள் இடையே கூட்டுறவு
Posted On:
14 JUL 2021 6:33PM by PIB Chennai
மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் மத்திய புவி அறிவியல் துறை இடையே துறை செயலாளர்களால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) இணையமைச்சர் திரு.ஜித்தேந்தர் சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் அலுவலகத் துறை செயலாளர், இந்திய அரசு அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவன் மற்றும் அறிவியல் துறை செயலாளர்கள் இந்நிகழ்வின் போது உடனிருந்தனர்.
அண்டார்டிக், ஆர்க்டிக், தெற்கு பெருங்கடல் மற்றும் இமய மலைப் பகுதிகள் துருவ பகுதிகள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவிரமான வெப்ப நிலை கொண்ட காரணத்தால் இவை சூழலில் மிகவும் தனித்துவமான நில அமைப்புகளாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன. உலகில் உள்ள பல்வேறு துறைகளில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் துருவ பகுதிகள் இன்னும் பெருமளவு ஆராயப்படாமலே உள்ளது.
தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பரஸ்பர புரிந்துணர்வு மேற்கொண்டு கூட்டுறவு, ஒன்றிணைவு மூலம் இரண்டு துறைகளில் தனித் திறன்கள் மூலம் துருவ உயிரியலில் உள்ள விடையறியப்படாத கேள்விகளுக்கு விடை தேட முயற்சி மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக, துருவ நுண்ணுயிர்கள் தொடர்பாக உயிரி தொழில்நுட்பவியல் பயன்பாடு பற்றி இரண்டு துறைகளும் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக துருவ அறிவியலில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட துறைகளில் சேர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*****************
(Release ID: 1735630)