நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்: உத்தரப் பிரதேசத்தில் 14.71 கோடி பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்காக மிக அதிகபட்சமாக 109.33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு
Posted On:
14 JUL 2021 1:19PM by PIB Chennai
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக விநியோகம் செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 109.33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்த மாநிலத்தில் சுமார் 14.71 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த உணவு தானியங்களின் மொத்த மதிப்பு ரூ. 40093 கோடியாகும்.
இதுபோன்ற விநியோகத்தில் உணவு மானியம், மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து, வணிகர்களின் லாப அளவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கும். இந்திய உணவுக் கழகத்தின் மூலம் உணவு தானியங்கள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் (மூன்று கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி) விநியோகிக்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு நாட்டிலேயே மிக அதிகமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3-4 ஆண்டுகளாக தொழில்நுட்பப் பயன்பாட்டினால் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டணத்தில் அரசுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரும் சேமிப்பினால் உணவு தானியங்களின் விநியோகம் மற்றும் கொள்முதல் அமைப்பு முறையில் உத்தரப் பிரதேசத்தில் கடலளவு மாற்றம் காணப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில், பொது விநியோக அமைப்புமுறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்ததற்கு தானியங்கி பொது விநியோக அமைப்புமுறை முக்கிய அம்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735329
*****
(Release ID: 1735329)
(Release ID: 1735339)
Visitor Counter : 238