உள்துறை அமைச்சகம்

செல்வி ரோசி சங்மா மற்றும் திரு.சாமுவேல் சங்மா ஆகியோரது மரணங்களில் சிபிஐ விசாரணை வேண்டும் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUL 2021 8:30PM by PIB Chennai

செல்வி ரோசி சங்மா மற்றும் திரு.சாமுவேல் சங்மா ஆகியோரது மரணங்களில் சிபிஐ விசாரணை வேண்டும் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கு செல்வி ரோசி சங்மா கடந்த ஜூன் 24 ஆம் தேதி குர்கானில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பிரச்னைகளால் உயிரிழந்தது தொடர்பானது. இது தொடர்பாக, அவரது உறவினர் திரு.சாமுவேல் சங்மா, ரோசியின் மருத்து சிகிச்சையில் குறைபாடு உள்ளதாகக் கூறி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு அடுத்த நாள், அதாவது ஜூன் 25 ஆம் தேதி, புதுதில்லி அவர் உயிரிழந்த தகவல் தில்லி காவல்துறைக்கு கிடைத்தது.

ரோசியின் குடும்பத்தினர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், திரு.சாமுவேல் சங்மா மருத்துவமனை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டிருக்காலம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1735205

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1735214) வருகையாளர் எண்ணிக்கை : 321
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu