எஃகுத்துறை அமைச்சகம்

ஆர்ஐஎன்எல், எம்எஸ்டிசி, கேஐஓசிஎல் மற்றும் எம்ஓஐஎல் ஆகியவற்றின் செயல்பாடுகளை எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 13 JUL 2021 6:00PM by PIB Chennai

ஆர்ஐஎன்எல் மற்றும் அதன் துணை நிறுவனங்களான பிஎஸ்எல்சி & ஓஎம்டிசி, எம்எஸ்டிசி மற்றும் அதன் துணை நிறுவனமான எஃப்எஸ்என்எல், கேஐஓசிஎல் மற்றும் எம்ஓஐஎல் ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தேவுடன் இணைந்து இன்று ஆய்வு செய்தார்,

இயக்கம் மற்றும் நிதி செயல்பாடுகள், தற்போதைய முக்கிய திட்டங்கள், முக்கிய நடவடிக்கைகள், கவனம் தேவைப்படும் பகுதிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆர்ஐஎன்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விளக்கினார். சக்கர ஆலையின் செயல்படுத்துதல் குறித்து விசாரித்த அமைச்சர், ரயில்வேக்கு எப்போதிலிருந்து சக்கரங்களின் விநியோகம் தொடங்கும் என்று கேட்டறிந்தார்.

தனது செயல்திறனை மேம்படுத்த ஆர்ஐஎன்எல் எடுத்த நடவடிக்கைகளை குறித்து கொண்ட அமைச்சர், செலவுகளை குறைத்து, செயல்திறனை மேலும் மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஆர்ஐஎன்எல்-ஐ கேட்டுக்கொண்டார். ஓஎம்டிசி சுரங்கங்களின் நிலைமை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பிஎஸ்எல்சி-யின் உற்பத்தி மற்றும் நிதி செயல்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது.

மின் வணிகம், வர்த்தகம் மற்றும் மறுசுழற்சி ஆகிய எம்எஸ்டிசி-யின் மூன்று தொழில் பிரிவுகள் குறித்து அமைச்சரிடம் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விளக்கினார். மின் வணிக பிரிவை குறித்து எடுத்துரைத்த அவர், அதன் வர்த்தகம் குறித்தும், வேளாண் பொருட்கள், இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஆற்றி வரும் சேவைகள் குறித்தும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

கசடு மேலாண்மை மற்றும் உலோக குப்பைகள் மீட்டுருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய சேவைகள் ஆற்றி வரும் துணை நிறுவனமான எஃப்எஸ்என்எல்-லின் செயல்பாடுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

கேஐஓசிஎல்-லின் வரலாற்று சிறப்பு மிக்க தருணங்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், அதை பன்முகத்தன்மை கொண்ட நிலையான நிறுவனமாக மாற்றுவதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்த அமைச்சர், தற்போதைய திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேஐஓசிஎல் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.

தொடக்க காலத்தில் இருந்து தற்போது வரையிலான எம்ஓஐஎல்-லின் முன்னேற்றங்கள் குறித்து அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விளக்கினார். சுற்றுச்சுழல் ஒப்புதல், உற்பத்தி அளவுகள் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 11 சுரங்கங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து முழுமையாக அவர் எடுத்துரைத்தார்.

தனது அடிப்படை செயல்பாடான சுரங்கங்களின் மீது எம்ஓஐஎல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் அமைச்சர் திரு சிங் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735124

*****************



(Release ID: 1735186) Visitor Counter : 182


Read this release in: Urdu , English , Hindi , Punjabi