பிரதமர் அலுவலகம்

ஜூலை 15 அன்று பிரதமர் வாரணாசி செல்கிறார்


ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 13 JUL 2021 6:11PM by PIB Chennai

ஜூலை 15, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமது பயணத்தின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

முற்பகல் 11 மணிக்கு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்கான ரோ ரோ கப்பல்கள், வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை பிரதமர் திறந்து வைப்பார். ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் ரூ. 839 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கார்கியான்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பகல் 12:15 மணிக்கு, ஜப்பான் ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ருத்ராக்ஷை பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு, பிற்பகல் 2 மணிக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவை அவர் ஆய்வு செய்வார். மேலும் கொவிட் தொடர்பான தயார்நிலை குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.

*****************


(Release ID: 1735165) Visitor Counter : 242