குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
11 JUL 2021 4:36PM by PIB Chennai
ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“புனித நிகழ்வான ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஜெகன்னாதரின் பூரி ரத யாத்திரை, ஒடிசா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் பிரசித்திபெற்ற திருவிழாக்களுள் ஒன்று. நமது பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் உள்ளடக்கிய நடைமுறை வழக்கங்களை இத்திருநாள் குறிப்பதுடன், இதில் கலந்து கொள்பவர்கள் அளவற்ற ஆன்மீக முக்கியத்துவத்தையும் பெறுகிறார்கள்.
‘பிரபஞ்சத்தின் கடவுள்' என்று அழைக்கப்படும் பகவான் ஜெகன்னாதரின் யாத்திரை, அதன் ஆடம்பரத்தாலும் அற்புதமான ரதங்கள் அல்லது தெய்வங்களை ஏற்றிச்செல்லும் தேர்களாலும் ஈடு இணையற்றதாகிறது.
இந்தியாவும் இதர உலக நாடுகளும் முன் எப்போதும் இல்லாத வகையில் கொவிட்- 19 தொற்றை எதிர்கொண்டு வரும் இந்தத் தருணத்தில், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மிகுந்த எச்சரிக்கையுடன் ரத யாத்திரைத் திருவிழாவைக் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ரத யாத்திரையுடன் தொடர்புடைய இறைப் பற்று மற்றும் உன்னத கொள்கைகள், அமைதி, இணக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியால் நமது வாழ்வை வளப்படுத்தட்டும்”, என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734600
*****************
(रिलीज़ आईडी: 1734613)
आगंतुक पटल : 288