ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒடிசாவுக்கு ரூ.3,323 கோடி மானியம் ஒதுக்கீடு
Posted On:
11 JUL 2021 3:46PM by PIB Chennai
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், ஒடிசாவுக்கான மத்திய அரசின் மானியம் 2021-221ம் ஆண்டில் ரூ.3,323.42 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.812.15 கோடியாக இருந்தது.
இந்த 4 மடங்கு உயர்வுக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவாத் ஒப்புதல் அளித்துள்ளார். 2024ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், ஒடிசாவில் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, ஒடிசாவில் 3.10 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே(3.63சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. அப்போது இருந்து இதுவரை 22.84 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 85.66 லட்சம் வீடுகளில், தற்போது 25.95 லட்சம் வீடுகளில்(30.3சதவீதம்) குடிநீர் குழாய் விநியோகம் உள்ளது.
ஒடிசா முதல்வருக்கு, ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து கிராமங்களிலும், குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும், அப்போதுதான் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜல்ஜீவன் திட்டத்தில் ஒடிசாவுக்கான முந்தைய ஒதுக்கீட்டில் ரூ.10.93 கோடி மிச்சம் உள்ளது. இத்திட்டத்தில் மாநில அரசின் பங்கீடான ரூ.3,253 கோடியை சேர்த்தால், ஒடிசாவுக்கு இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.6,596 கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734590
*****************
(Release ID: 1734608)
Visitor Counter : 282