கனரகத் தொழில்கள் அமைச்சகம்

மத்திய கனரக தொழில்கள் அமைச்சராக திரு மகேந்திர நாத் பாண்டேவும், இணை அமைச்சராக திரு கிஷண் பால் குர்ஜாரும் பொறுப்பேற்றனர்

Posted On: 09 JUL 2021 7:07PM by PIB Chennai

மத்திய கனரக தொழில்கள் அமைச்சராக திரு மகேந்திர நாத் பாண்டே இன்று பொறுப்பேற்றார்.

அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், நாட்டின் தொழில் துறையில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமில்லாமல் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்திய அரசின் சிறந்த கொள்கைகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

இதற்கு முன்னர் மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சராக இருந்த டாக்டர் பாண்டே, 2016 ஜூலை 5 முதல் 2017 செப்டம்பர் 2 வரை மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் (தற்போது கல்வி அமைச்சகம்) இணை அமைச்சராக பணியாற்றினார். ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள திரு பாண்டே, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அமைச்சகத்தின் இணை அமைச்சராக திரு கிஷண் பால் குர்ஜார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் இணை அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார். 

ஹரியானாவில் உள்ள பரிதாபாத் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள அவர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார்.

மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு அருண் கோயல் மற்றும் உயரதிகாரிகள் அமைச்சர்களை வரவேற்றனர்.

*****************



(Release ID: 1734314) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Marathi