நிதி அமைச்சகம்
முதலாவது இந்தியா-இங்கிலாந்து நிதி சந்தை பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை
Posted On:
09 JUL 2021 9:52AM by PIB Chennai
இந்தியாவும், இங்கிலாந்தும் நிதி சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நேற்று மாலை நடத்தின. நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த 10வது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் (EFD) முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இந்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து நிதித்துறை அதிகாரிகள் தலைமை தாங்கினர். ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பரிமாற்ற வாரியம், இங்கிலாந்து ஒழுங்குமுறை முகமைகள், சர்வதேச நிதிச்சேவை மைய ஆணையம், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம், இங்கிலாந்து வங்கி மற்றும் நிதி நடத்தை ஆணையம் ஆகியவையும் இதில் பங்கேற்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து சார்பில் பங்கேற்றவர்கள், அந்தந்த பொறுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிதிச்சந்தை செயல்பாட்டில் நாடுகள் இடையேயான செயல்பாடுகளை அதிகரிக்க, பங்கேற்பாளர்கள் வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறையில் உள்ள அண்மைத் தகவல்களை வழங்கினர். சைபர் மீட்பு நடவடிக்கையில் தனது பணி குறித்து இங்கிலாந்து வங்கி ஆலோசித்தது. கொவிட்-19 தொற்று நேரத்தில் நிலைத்தன்மையை பராமரித்ததில் வங்கித்துறையின் பங்கை இருதரப்பினரும் அங்கீகரித்தனர்.
கொவிட்-19 தொற்றால் உள்நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு, காப்பீடு துறை தொடர்பான விஷயங்கள், இந்திய சந்தையில் இங்கிலாந்து முதலீட்டை அதிகரிக்கும் வாய்ப்புகள் மற்றும் சான்றுக்கான இங்கிலாந்து நொடிப்பு நிலை இரண்டாம் அழைப்பு ஆகியவை குறித்து இதில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர்.
வரும் மாதங்களில் இது குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடரவும், எதிர்காலத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கவும், இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இரண்டும் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734069
*****************
(Release ID: 1734272)
Visitor Counter : 227