இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சராக திரு அனுராக் தாக்கூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2021 6:19PM by PIB Chennai

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சராக திரு அனுராக் தாக்கூர் புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன் இந்த பொறுப்பை வகித்த திரு கிரண் ரிஜிஜூவின் சிறப்பான பணியை தாம் முன்னெடுத்து செல்லவுள்ளதாக தெரிவித்த திரு தாக்கூர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்திற்கேற்ப, விளையாட்டு மற்றும் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க தேவையான முயற்சிகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733794

----


(வெளியீட்டு அடையாள எண்: 1733998) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada