கலாசாரத்துறை அமைச்சகம்

மத்திய கலாச்சார அமைச்சராக திரு ஜி கிஷண் ரெட்டி பொறுப்பேற்பு

Posted On: 08 JUL 2021 5:35PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சராக திரு ஜி கிஷண் ரெட்டி புதுதில்லி சாஸ்திரி பவனில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இணை அமைச்சர்களாக திருமதி மீனாட்சி லேகி மற்றும் திரு அர்ஜுன் ராம்  மேக்வால் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சுற்றுலா, வட கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான மத்திய அமைச்சராகவும் திரு கிஷண் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை அவர் வகித்து வந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு ரெட்டி, பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடையும் நோக்கத்தோடு முழு உறுதித் தன்மையுடன் பணியாற்றுவோம் என்று கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெலங்கானாவின் செகந்திராபாத் தொகுதியில் வெற்றிபெற்று 17-ஆவது மக்களவைக்கு திரு ஜி கிஷண் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

குழந்தை இருதய நோயாளிகளுக்காக திரு ரெட்டி மேற்கொண்ட பணிகள், ஓர் இயக்கமாக வலுவடைந்து ஐக்கிய நாடுகளின் யூனிசெப் அமைப்பால் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கு உகந்த சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது.

தீவிரவாதத்திற்கு எதிராக ஓர் பிரச்சாரத்தை அவர் துவக்கியதுடன், புதுதில்லியில் 54 நாடுகளைச் சேர்ந்த சுமார் 193 பேர் கலந்து கொண்ட தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச இளைஞர் மாநாட்டையும் நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733766

                                                                                      ----  



(Release ID: 1733956) Visitor Counter : 157