அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஐதராபாத்தில் சூரிய வெப்ப சாதனங்களின் பாகங்களை பரிசோதிக்கும் மையம்: இந்தியாவில் சூரிய எரிசக்தி துறைக்கு மேலும் ஊக்கம்

Posted On: 07 JUL 2021 6:47PM by PIB Chennai

ஐதராபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட சூரிய வெப்பம் அடிப்படையிலான பரிசோதனை மையம், நாட்டில் சூரிய வெப்ப தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

இதன் மூலம் சூரிய வெப்ப கருவிகளின் பாகங்களான சோலார் ரிசீவர் ட்யூப்புகள், வெப்ப பரிமாற்ற திரவங்கள், செறிவூட்டப்பட்ட கண்ணாடிகள் ஆகியவற்றின் திறன் மற்றும் செயல்பாடுகளை பரிசோதிக்க முடியும்.

இந்த சோதனை மையத்தை, தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (ARCI) அமைத்தது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி மையம். இது சூரிய வெப்ப கருவிகளின் பாகங்களை மதிப்பீடு செய்யும்.

இது தொடர்பாக, மலிவுவிலை சோலார் ரிசீவர் ட்யூப்புகள், பிரதிபலிக்காத கண்ணாடி கவர்கள், நானோ தெர்மிக் திரவங்கள் மற்றும் நீடித்து உழைக்கக் கூடிய கண்ணாடிகள் உருவாக்கத்தில் ஏஆர்சிஐ பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் சூரிய வெப்ப கருவிகளின் செயல்பாடு மேம்படும், விலை குறையும்

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சூரிய வெப்ப கருவி பாகங்களின் செயல்பாடு பற்றிய அறிக்கையை ஏஆர்சிஐ பரிசோதனை மையம் தெரிவிக்கிறது. இது தொழில்துறையை கவர்ந்துள்ளது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள எச்பிசிஎல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுமையம், ஏஆர்சிஐ-க்கு ஒரு திட்டத்தை வழங்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெப்ப கடத்தல் திரவங்களை, உலகளவில் முன்னணியில் உள்ள தயாரிப்புடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதுதான் அந்தப் பணி

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:

Dr.S.Sakthivel, Head, Centre for Solar Energy Materials, ARCI at ssakthivel[at]arci[dot]res[dot]in.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733436

----(Release ID: 1733492) Visitor Counter : 72