பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் குறித்த கூட்டத்தை இந்தியா மற்றும் சிங்கப்பூர் நடத்தின
प्रविष्टि तिथि:
07 JUL 2021 6:09PM by PIB Chennai
'பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம்' எனும் தலைப்பில் 2018 ஜூன் 1 அன்று பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் அமைச்சகம் மற்றும் பொது சேவைப் பிரிவு, சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இருதரப்பு கூட்டமொன்றை காணொலி மூலம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நடத்தின.
இக்கூட்டத்தில் இந்திய தரப்பிலிருந்து நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் சிங் மற்றும் சிங்கப்பூர் தரப்பிலிருந்து பொது சேவை பிரிவின் நிரந்தர செயலாளர் திரு லோ கும் இயான் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பெருந்தொற்றின்போது மேற்கொள்ளப்பட்ட நல்லாளுகை நடவடிக்கைகள், தலைமைத்துவம் மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துதல், திறன் வளர்த்தல், தலைவர்கள் மற்றும் பொது அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், மக்களை சார்ந்த ஆளுகை ஆகியவை குறித்து இரு தரப்புகளும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டன. மக்கள் சார்ந்த சேவை வழங்கல் மற்றும் மின் ஆளுகை ஆகியவை எதிர்கால கூட்டிற்கான சாத்தியமுள்ள துறைகளாக கண்டறியப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டிற்கான வாய்ப்பு இருநாடுகளின் வளர்ச்சிக்கும் மிகவும் தேவை என்பதால், தற்போதைய தொழில்நுட்ப உபகரணங்கள், ஆளுகை செயல்பாடுகள், திறன் வளர்த்தல், சேவை வழங்கல் உள்ளிட்டவற்றில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள இருதரப்பும் முடிவெடுத்தன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733424
----
(रिलीज़ आईडी: 1733461)
आगंतुक पटल : 284