குடியரசுத் தலைவர் செயலகம்

தாய்லாந்து, ருமேனியா, கஜகஸ்தான், துருக்கி நாடுகளின் தூதர்கள், இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமனக் கடிதங்களை வழங்கினர்

Posted On: 07 JUL 2021 2:21PM by PIB Chennai

தாய்லாந்து, ருமேனியா, கஜகஸ்தான் குடியரசு, துருக்கி குடியரசு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களைக் காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்திடம் இன்று (ஜூலை 7, 2021) வழங்கினார்கள்.

தூதர்களின் விவரங்கள்:

1.       மேதகு திருமிகு பட்டரட் ஹாங்டாங், தாய்லாந்தின் தூதர்

2.       மேதகு திருமிகு டேனியலா மரியானா செசோனோவ்தானே, ருமேனியாவின் தூதர்

3.       மேதகு திரு நர்லான் சல்காஸ்பாயேவ், கஜகஸ்தான் குடியரசின் தூதர்

4.       மேதகு திரு ஃபிராத் சுனில், துருக்கி குடியரசின் தூதர்

இந்த நிகழ்வின் போது பேசிய குடியரசுத் தலைவர், தூதர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்த நாடுகளுடன் இந்தியா அன்பான மற்றும் நட்பு ரீதியான உறவை மேற்கொண்டுள்ளது என்றும், அமைதி மற்றும் வளமைக்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையில் நமது உறவு வேறூன்றி இருப்பதாகவும் கூறினார்.

 

நமது ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் பொருளாதார நல்வாழ்விற்காக கொவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்த மற்றும்  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

உலகின் மருந்தகமாக’, பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஏராளமான நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி இந்தியா ஆதரவளித்துள்ளது.

தங்களது நாட்டுத் தலைவர்களின் சார்பாக இந்த நான்கு நாடுகளின் தூதர்களும் இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றி தங்களது உறவை வலுப்படுத்தும் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733336


******



(Release ID: 1733352) Visitor Counter : 258