அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ரீஜெனரான் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 9 கிராண்ட் விருதுகள் மற்றும் 8 சிறப்பு விருதுகளை இந்திய அணி வென்றது
Posted On:
03 JUL 2021 4:20PM by PIB Chennai
உயிரினங்களில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்க்கும் ஜீன்கள் மற்றும் உடல்நிலையை துல்லியமாக கண்டறிய உதவும் ஸ்மார்ட் ஸ்டெதோஸ்கோப் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளுக்காக ரீஜெனரான் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 9 கிராண்ட் விருதுகள் மற்றும் 8 சிறப்பு விருதுகளை இந்திய அணி 2021 வென்றது.
இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் இளம் மாணவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
ரீஜெனரான் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்ற ஐரிஸ் தேசிய கண்காட்சியின் வெற்றியாளர்களுடன் காணொலி மூலம் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, உரையாடினார்.
உலகெங்கிலும் உள்ள 64 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் மண்டலங்களில் இருந்து கலந்து கொண்ட 1833 இளம் விஞ்ஞானிகளுடன் போட்டியிட்ட இம்மாணவர்கள், 17 விருதுகளை வென்றனர்.
காணொலி மூலம் இந்த வருடம் நடைபெற்ற ஐரிஸ் தேசிய கண்காட்சியில், 65,000-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அறிவியல் பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் 21 வகைகளின் கீழ் மதிப்பிடப்பட்டன. கடுமையான மதிப்பீட்டு முறைக்கு பின் இந்திய அணி 2021 தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரீஜெனரான் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக ஐரிஸ் அறிவியல் ஆய்வு குழுவால் பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச தரத்தில் திட்டங்களை உருவாக்க அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732504
-----
(Release ID: 1732520)
Visitor Counter : 244