சுற்றுலா அமைச்சகம்
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவித்த திட்டங்களை வரவேற்றுள்ளது சுற்றுலா தொழில்துறை
Posted On:
01 JUL 2021 4:23PM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், இந்திய பொருளாதாரத்துக்கு உதவ, ரூ. 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த 28ம் தேதி அறிவித்தார்.
நாட்டின் சுற்றுலாத்துறையை புதுப்பிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை தூண்டவும், இதர பல துறைகளுக்கு நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசு அறிவித்த நடவடிக்கைகளை சுற்றுலாத் தொழில்துறை வரவேற்றுள்ளது. இது குறித்து கிரியேட்டிவ் டிராவல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் திரு ராஜீவ் கோலி கூறியதாவது:
சுற்றுலாவை மையமாக கொண்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இது சரியான நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனாலும், ரூ.10 லட்சம் என்ற தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதித்துள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு அதிகளவிலான உதவி தேவை. விசாவை பொறுத்தவரை, நல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் வரை இலவச விசா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுறு்றுலா ஆப்ரேட்டர்களின் இந்திய சங்க தலைவர் திரு. ராஜீவ் மெஹ்ரா கூறுகையில், ‘‘ 2022 மார்ச் 31ம் தேதி வரை, 5 லட்சம் இலவச விசா உட்பட சுற்றுலா துறைக்கு, சில நிவாரணங்கள் அளித்ததற்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’’ என்றார்.
இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் திருமிகு. ஏக்தா வாட்ஸ் கூறுகையில், சுற்றுலாத்துறையை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட நிதியுதவி, நிதியமைச்சர் மேற்கொண்ட நேர்மறையான நடவடிக்கை. இது நிச்சயம் பாராட்டத்தக்கது. இது சுற்றுலாத்துறைக்கு நிச்சயம் புத்துயிர் அளிக்கும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731924
-----
(Release ID: 1732059)
Visitor Counter : 317