ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உத்தரப் பிரதேசம் பஸ்தியில் ஃபாக்ட்(FACT) நிறுவனம் வழங்கிய ஆக்ஸிஜன் ஆலையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 01 JUL 2021 3:14PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் பஸ்தியில் உள்ள ஒபக் காய்லி மருத்துவமனைக்கு, திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயணங்கள் நிறுவனம்(FACT) வழங்கிய பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலையை, ரசாயணம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நமது சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கும் வாய்ப்பை கொவிட் தொற்று வழங்கியுள்ளது. கொவிட் தொற்றை எதிர்த்து போராடவும், மக்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஃபேக்ட் நிறுவனம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் இந்த பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலையை அமைத்துள்ளது. இது நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும். இதுபோல், மேலும் 4 ஆக்ஸிஜன் ஆலைகளை கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஃபேக்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731893

-------


(रिलीज़ आईडी: 1731954) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati