பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி பொறுப்பேற்பு

Posted On: 01 JUL 2021 2:08PM by PIB Chennai

விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி, இன்று (ஜூலை 01, 2021) பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் அவர் இணைந்தார். ஆபரேஷன் மேக்தூத், ஆப்ரேஷன் சஃபேத் சாகர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உட்பட போர் மற்றும் பயிற்சி விமானங்களில் சுமார் 3800 மணி நேரங்கள் பயணித்த அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் வெல்லிங்டன் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் முன்னாள் மாணவராவார்.

இந்திய விமானப்படையில் தமது நீண்டகால பணியின்போது போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும், ஏர் வைஸ் மார்ஷலாக, விமானப்படை அகாடமியின் துணை தளபதியாகவும், விமான பணியாளர் இயக்ககத்தின் (விமான பாதுகாப்பு) துணைத் தளபதியாகவும், விமானப் பணியாளர் அதிகாரிகளின் துணை தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். விமானப் படையின் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்புவிமானப்படை மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரியாக அவர் பதவி வகித்தார்.

தமது 39 கால நெடிய பணியை நிறைவு செய்து ஜூன் 30-ஆம் தேதி ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஹெச் எஸ் அரோராவிடமிருந்து ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது விமானப்படை தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்விலும் இருவரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731870

 

----



(Release ID: 1731938) Visitor Counter : 235