சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக கருதும் உணர்வு மேலும் அதிகரித்துள்ளது: மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 01 JUL 2021 1:53PM by PIB Chennai

மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக கருதும் உணர்வு மேலும் அதிகரித்துள்ளது  என  நன்றி வார தொடக்க நிகழ்ச்சியில்  டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, நன்றி வாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதற்கு ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில்  பிரபல மருத்துவர்கள் இடையே அவர் பேசியதாவது

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த மருத்துவ ஊழியர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல மருத்துவர்களால் வீட்டில் இருந்து கொண்டு, இந்த பெருந்தொற்றை வேடிக்கை பார்த்திருக்க முடியும். ஆனால், நீங்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை. ஓய்வுபெற்ற மருத்துவர்களும், ராணுவ மருத்துவர்களும், தாங்களாக முன்வந்து, தக்க தருணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தனர். பெருந்தொற்றின் அபாயத்தை நன்கு அறிந்த மருத்துவ மாணவர்களும் உற்சாகத்துடன் முன்வந்து, இந்த தொற்று சவாலை முறியடிக்க நாட்டுக்கு உதவினர்.

மருத்துவ தொழில் மிக உயர்ந்த உன்னதமான தொழிலாக கருதப்பட்டாலும், மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக நோயாளிகள் கருதினாலும், இந்த உணர்வை, கொவிட்-19 இன்னும் அதிகமாக்கியுள்ளது. தங்கள் உயிருக்கு ஏற்படும் அபாயத்தை மருத்துவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவை ஒழிக்க மூன்று அடுக்கு செயல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731867

----



(Release ID: 1731906) Visitor Counter : 237