நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவு: வெற்றியில் பங்களிக்கும் வரி செலுத்தியவர்களை கவுரவிக்க மத்திய மறைமுக வரி வாரியம்(சிபிஐசி) முடிவு

Posted On: 30 JUN 2021 5:41PM by PIB Chennai

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நாளை 4 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இதன் வெற்றி கதையில் பங்களித்த வரி செலுத்தியவர்களை கவுரவிக்க, மத்திய மறைமுக வரி வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்தம் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி). ஜிஎஸ்டி வரி வீதம் பல ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டது, வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவை ஜிஎஸ்டி வரி வருவாய் வேகமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து, தொடர்ந்து 8 மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருந்து வருகிறது.  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைவதால், ஜிஎஸ்டி வெற்றிக்கு ஒரு பகுதி காரணமாக இருந்த வரி செலுத்துவோரை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி செலுத்தியதில் கணிசமாக பங்களிப்பு அளித்தவர்கள் மற்றும் சரியான நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்தவர்களை அடையாளம் காண தரவு பகுப்பாய்வு ஒன்றை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நடத்தியது.

இதன்படி 54,439 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 88 சதவீதம் பேர் குறு, சிறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுபவர்கள்.  தமிழகத்தில்  5,589 பேரும், புதுச்சேரியில் 47 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாநில வாரியாக அடையாளம் காணப்பட்டவர்களின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம். 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731542

*****************



(Release ID: 1731739) Visitor Counter : 297