புவி அறிவியல் அமைச்சகம்

பார்மர், பில்வாரா, தோல்பூர், அலிகர், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் வழியாக தெற்மேற்கு பருவகாற்று தொடர்ந்து கடந்து செல்கிறது

प्रविष्टि तिथि: 30 JUN 2021 1:12PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பார்மர், பில்வாரா, தோல்பூர், அலிகர், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் வழியாக தென்மேற்கு பருவ காற்று தொடர்ந்து முன்னேறிவருகிறது

தற்போது நிலவும் வானிலை நிலவரம், வளிமண்டல அம்சங்கள் ஆகியவை, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி, மற்றும் பஞ்சாப் ஆகியவற்றின்  மீதமுள்ள பகுதிகளுக்கு  தென் மேற்கு பருவ காற்று அடுத்த 67 நாட்களுக்கு மேலும் முன்னேற சாதகமாக இல்லை.

கிழக்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து வடகிழக்கு அசாம் வரை, பீகார் மற்றும் மேற்குவங்கத்தின் இமயமலைப் பகுதிகளுக்கு குறுக்கே காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது.

கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேலே 0.9 கி.மீக்கு மேலே புயல் சுழல் நிலவுகிறது.

கிழக்கு மத்திய அரபிக்கடலில், மகாராஷ்டிரா கடற்கரை பகுதியிலிருந்து, தெற்கு கேரளா வரை கர்நாடக கடலோரப் பகுதிக்கு குறுக்கே காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது.

மேற்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு ஓமன் கடலோர பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் புயல் சுழல் காணப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731397

*****************


(रिलीज़ आईडी: 1731422) आगंतुक पटल : 348
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi