பாதுகாப்பு அமைச்சகம்
சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார் ராணுவ தளபதி
प्रविष्टि तिथि:
25 JUN 2021 4:43PM by PIB Chennai
சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC) ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார். ராணுவ உத்தி அம்சங்கள், கோட்பாடு திருத்தங்கள், செயல்பாட்டு சவால்கள், தயார்நிலை, தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகியவை குறித்து ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயாவையும், ராணுவ தளபதி ஜெனரல் நரவானே சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் ராணுவத்தினரின் மனைவிகள் நலச்சங்க தலைவியையும் ராணுவ தளபதி சந்தித்து பேசினார். கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் தியாகம் செய்த வீரர் அங்குஸ் குடும்ப உறுப்பினரிடம் சேனா பதக்கத்தை வழங்கி ராணுவ தளபதி கவுரவித்தார்.
ராணுவத் தளபதி நாளை தில்லி திரும்புகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730315
****************
(रिलीज़ आईडी: 1730347)
आगंतुक पटल : 300