பாதுகாப்பு அமைச்சகம்

கர்வார் கடற்படை தளத்தின் வளர்ச்சி பணிகள்: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted On: 24 JUN 2021 5:44PM by PIB Chennai

கடல் பறவை திட்டத்தின் கீழ் (Project Seabird), கர்நாடகாவில் உள்ள கர்வார் கடற்படை தளத்தில் நடைபெறும்  உள் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.

கடல் பறவை திட்டத்தின் கீழ் நடைபெறும் உள் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்ய கர்நாடக மாநிலம் கர்வார் கடற்படை தளத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று சென்றார்.

ஐஎன்எஸ் கடம்பா ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கும் முன்கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங்குடன் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வான் வழியாக பார்வையிட்டார்இவர்களை கடற்படை மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படையின்  கர்நாடகா பகுதி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் மகேஷ் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

ஆய்வுக்குபின் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியதாவது

நாட்டை பாதுகாப்பதில், கடற்படை தனது கடமைகளை வெற்றிகரமாக செய்கிறது. 7,500 கி.மீ தூரத்துக்கும் அதிகமான இந்திய கடலோர பகுதி, 1,300 தீவுகள் மற்றும் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் வரையுள்ள பொருளாதார மண்டலம் ஆகியவற்றை பாதுகாத்து, உலக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடி வகுத்த அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி(சாகர்) திட்டத்தின் கீழ் கடல்சார் அண்டை நாடுகளுடன் நட்புறவை கடற்படை வலுப்படுத்துகிறது.

கொவிட் தொற்று சமயத்தில் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகளை கடற்படை வழங்கியது. வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களை தாயகம் அழைத்து வந்தது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உட்பட மருத்துவ பொருட்களை கொண்டு வந்தது என கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் கடற்படை அயராது பணியாற்றியதுபலநாடுகளுக்கும் கடற்படை உதவிகள் வழங்கியது.

இவ்வாறு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

-----



(Release ID: 1730101) Visitor Counter : 395