சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றி ஊடகத்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
23 JUN 2021 6:08PM by PIB Chennai
கொவிட்-19 பற்றி, 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகத்துறையினருக்கு திறன்மேம்பாட்டு பயிலரங்கை யூனிசெப்புடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று நடத்தியது. கொவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான கட்டுக்கதைகளை களைவது, கொவிட் தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் இதில் வலியுறுத்தப்பட்டது.
இந்த தேசிய பயிலரங்கில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் உரையாற்றினார். இதில் சுகாதாரத்துறை செய்திகளை சேகரிக்கும் 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், டி.டி.நியூஸ், அகில இந்திய ரேடியோ, பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ,
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் ஊடக பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் நன்றி தெரிவித்தார். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு கற்பிப்பதில், ஊடகங்கள் சமூக பொறுப்புடன் கூடிய முக்கியமான தூண் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு பின்பற்றிய கொவிட் உத்தி குறித்து சுருக்கமாக விளக்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு லாவ் அகர்வால், தொற்றை கட்டுப்படுத்துவதில் சமுதாய பங்களிப்பு முக்கியமானது என குறிப்பிட்டார். தொற்றுக்கு எல்லைகள் இல்லை என்றும், மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைதான் கொவிட்டுக்கு எதிரான கூட்டு போராட்டத்தில் மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729811
*****************
(रिलीज़ आईडी: 1729851)
आगंतुक पटल : 248