நிதி அமைச்சகம்

பூட்டானின் எல்லைகளில்லா வரி ஆய்வளர்கள் திட்டம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது

Posted On: 23 JUN 2021 6:29PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் கூட்டு நடவடிக்கையான எல்லைகளில்லா வரி ஆய்வளர்கள் திட்டம் தனது செயல்பாடுகளை பூட்டானில் இன்று தொடங்கியது. இத்திட்டத்திற்கான கூட்டு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

24 மாதங்களுக்கு செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமையகத்தோடு இணைந்து பூட்டானின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். பூட்டானின் வரி தணிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறந்த தணிக்கை நடைமுறைகள் பகிரப்படும். சர்வதேச வரிவிதிப்பு மற்றும் மாற்று விலை நிர்ணயம் ஆகியவற்றின் மீது இத்திட்டம் கவனம் செலுத்தும்.

பூட்டான் வருவாய் மற்றும் சுங்க துறையின் தலைமை இயக்குநர் திரு நிபுட் க்வெல்ட்ஷென், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமையக தலைவர் திருமிகு ருசுடன் கெமுலாரியா மற்றும் பூட்டான், ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம், ஓஈசிடி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமையகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி மற்றும் வரி ஆராய்ச்சி பிரிவின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற தொடக்க நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் திரு ஜே பி மொகாபத்ரா காணொலி மூலம் கலந்து கொண்டார்.

இந்திய-பூட்டான் தொடர் ஒத்துழைப்பின் மற்றுமொரு மைல்கல்லாக இத்திட்டம் விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729822

*****************


(Release ID: 1729848)