நிதி அமைச்சகம்

புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து வரி நிபுணர்கள், இதர பங்குதாரர்கள் மற்றும் இன்போசிஸ் உடன் நிதி அமைச்சகம் ஆலோசனை

Posted On: 22 JUN 2021 8:05PM by PIB Chennai

புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சகம் மற்றும் இன்போசிஸின் மூத்த அதிகாரிகள் இடையேயான கூட்டம் ஒன்று 2021 ஜூன் 22 அன்று நடைபெற்றது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இதற்கு தலைமை தாங்கினார். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூரும் இதில் பங்கேற்றார்.

வருமான வரி துறையின் புதிய இணையதளம் 2021 ஜூன் 7 அன்று தொடங்கப்பட்டது. அன்றிலிருந்தே அதன் செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

வரி செலுத்துவோர், வரி நிபுணர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்த குறைகளை தொடர்ந்து, இணையதளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திடம் இது குறித்து நிதி அமைச்சர் முறையிட்டு, குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினார்.

இருந்தபோதிலும் இணையதளத்தில் சிக்கல்கள் தொடர்ந்து பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டதால், இன்றைய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தின் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், வரிசெலுத்துவோருக்கு முறையான சேவை வழங்குவது அரசின் முக்கிய முன்னுரிமை என்றும், வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இணையதளத்தில் உள்ள குறைகள் குறித்து கவலை தெரிவித்த அவர், பிரச்சினைகளை விரைந்து சரிசெய்யுமாறு இன்போசிஸ் நிறுவனத்தை கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729504

*****************

 



(Release ID: 1729525) Visitor Counter : 245