எஃகுத்துறை அமைச்சகம்

கர்நாடகாவில் பிராணவாயு உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 22 JUN 2021 1:43PM by PIB Chennai

மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பொதுத்துறை நிறுவனமான குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனத்தால் கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏராளமான திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். ஒரு பிராணவாயு உற்பத்தி ஆலை, அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள், 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிசக்தி ஆலை முதலியவை இதில் அடங்கும். மத்திய எஃகு இணை அமைச்சர் திரு ஃபக்கன்சிங் குலஸ்தேவும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரதான், முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொவிட் தொற்றின் இரண்டாவது அலையின் போது நம் நாடு புதிய சவால்களை சந்தித்து, மருத்துவ முறையில் மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். நாட்டில் மருத்துவப் பிராணவாயுவின் தேவை அதிகரித்தபோது, அதை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த எஃகு மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் மருத்துவப் பிராணவாயுவை விநியோகித்தன. இந்தியாவில் பிராணவாயுவின் தேவை நாளொன்றுக்கு சுமார் 10,000 மெட்ரிக் டன்னாக கடந்த மாதம் அதிகரித்தபோது எஃகு நிறுவனங்கள் எஃகின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். பிராணவாயு உற்பத்தித் திறன்கள், பெரும்பாலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில்  இருப்பதாகவும்,ஆனால் அதிக தேவை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்  இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிலை சரியாகக் கையாளப்பட்டு, போதிய செயல்திறன்கள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது இந்தியாவில் பிராணவாயு செறிவூட்டிகள், சிலிண்டர்கள் மற்றும் அழுத்த விசைத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆலைகளின் பற்றாக்குறை எங்குமே இல்லை. பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்ட கர்நாடக அரசிற்கு அமைச்சர் திரு பிரதான் பாராட்டு தெரிவித்தார். தொடக்கக் காலத்தில், அண்டை மாநிலங்களுக்கும் கர்நாடகா பிராணவாயுவை விநியோகம் செய்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729339

*****************


(Release ID: 1729391) Visitor Counter : 214