அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்ப துறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
22 JUN 2021 8:52AM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்ப துறை மற்றும் அதன் தன்னாட்சி மையங்கள் சர்வதேச யோகா தினத்தை நேற்று கொண்டாடின.
இந்நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கலந்துகொண்டு பேசுகையில், உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா முக்கியமானது என கூறினார். கொவிட் கட்டுப்பாடுகளுடன் கூடிய வேகமான உலகில், தொற்றற்ற நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை நோய்களில் இருந்து விலகியிருப்பதற்கு யோகாதான் சிறந்த வழி என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த உலகமும், உடல்சார்ந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவது பொருத்தமானது. மென்மையான அணுகுமுறை மற்றும் சிறிய அளவிலான வழிகாட்டுதல் தேவைப்படுவதால், பல்வேறு மக்களுக்கு யோகா ஏற்றது என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729273
*****************
(Release ID: 1729374)
Visitor Counter : 267