சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 21 JUN 2021 2:35PM by PIB Chennai

கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை  மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று தொடங்கி வைத்தார்.

கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்வாழ்க்கை இருக்கும்போது நம்பிக்கையும் இருக்கிறதுஎன்ற பிரச்சாரத்தையும், தடுப்பூசி பற்றிய வதந்திகளை தகர்ப்போம் என்ற பிரச்சாரத்தையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று தொடங்கி வைத்தார்.

உத்தரப் பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தின் சம்ராவ்வா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்து திரு முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:

கொரோனா தடுப்பூசி போட தயங்குவது, கொரோனாவுக்கு விடுக்கும் அழைப்பு. நாட்டின் சில பகுதிகளில், கொரோனா தடுப்பூசி பற்றி வதந்திகளை சிலர் பரப்புகின்றனர். அவர்கள் எல்லாம் சுகாதாரம் மற்றும் மக்கள் நலனுக்கான எதிரிகள்.

சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம், சமூக-கல்வி இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் சுய உதவி குழுவினர் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் நடத்தவுள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றி பிரபலங்களின் வீடியோ கருத்துக்களும், சமூக இணையதளங்கள் மூலம் வெளியிடப்படும்இந்த பிரச்சாரத்தில் பல பிரபலங்கள் இணையவுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729024

----



(Release ID: 1729136) Visitor Counter : 211