எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்தை என்டிபிசி கொண்டாடியது

Posted On: 21 JUN 2021 12:47PM by PIB Chennai

மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி சர்வதேச யோகா தினத்தை இன்று கொண்டாடியது. எத்தகைய சூழ்நிலையிலும் நாட்டுக்கு சேவையாற்ற எப்போதுமே தயாராக இருக்கும் என்டிபிசி பணியாளர்கள், காணொலி மூலம் யோகா தின கொண்டாட்டங்களில் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

மூத்த அதிகாரிகள் பால் பவனிலும், இதர பணியாளர்கள் காணொலி மூலமும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் உரையாற்றிய என்டிபிசி உன்சாஹர் தலைமை பொது மேலாளர் திரு போலா நாத், “அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்காக யோகா என்பதே நமது குறிக்கோளாகும்,” என்றார்.

யோகா குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக என்டிபிசி பணியாளர்களை அவர் பாராட்டினார். நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, ஏழைகள் முதல் பழங்குடியினர் வரை நவீன யோகா குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை ஆக்குவது குறித்து அவர் வலியுறுத்தினார்.

2014-ம் ஆண்டு இந்திய அரசு யோகா பயிற்சியை தொடங்கியதில் இருந்து யோகா தினத்தை என்டிபிசி உன்சாஹர் கொண்டாடி வருகிறது. அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் வகையில் மிகவும் திட்டமிட்டு இன்றைய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728991

 

----


(Release ID: 1729130) Visitor Counter : 142