சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்கள்

Posted On: 20 JUN 2021 9:13AM by PIB Chennai

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 7,29,243-ஆக குறைந்துள்ளனர்.

81 நாட்களுக்குப்பின், நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு 60,000க்கும் கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு  தொற்று ஏற்பட்டது.

நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,66,009.

கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் குணமடைந்தனர்.  தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட கடந்த 38 நாட்களாக அதிகமாக உள்ளது.  குணமடைந்தோர் வீதம் 96.27 சதவீதமாக அதிகரிப்பு

வார அளவிலான தொற்று வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது 3.43 சதவீதமாக உள்ளது.

தினசரி பாதிப்பு வீதம் 3.22 சதவீதம், கடந்த 13 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாக  உள்ளது.

கொவிட் பரிசோதனை திறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது - இது வரை 39.10 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய தடுப்பூசி நடவடிக்கையின் கீழ் 27.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

                                                                                                                                   -----

(Release ID -1728699)


(Release ID: 1728774) Visitor Counter : 175