புவி அறிவியல் அமைச்சகம்

உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted On: 18 JUN 2021 3:46PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தி:

வெள்ளி, ஜூன் 18, 2021

வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி பிற்பகல் 2:20

ஜூன் 18 (நாள் 1):

உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  கொங்கன் மற்றும் கோவாவின் சில இடங்களிலும், மேற்கு உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை பாயும் பகுதிகள், மத்திய மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களிலும் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு வங்கத்திலுள்ள இமாலய பகுதிகள் மற்றும் சிக்கிம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, சவுராஷ்டிரா மற்றும் கட்ச், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாஹேவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானாவின் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) வீசக்கூடும். ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கித்- பல்திஸ்தான் மற்றும் முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, குஜராத் மற்றும் மரத்வாடாவின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728202

*****************



(Release ID: 1728278) Visitor Counter : 149